2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று நாமக்கல்லில் பேசுகையில், திமுக குறித்தும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுக - பாஜக உறவு குறித்து...
அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், "பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம். இந்த திமுக அரசு போல, அண்டர் கிரவுண்ட் டீலிங் வைத்துக்கொண்டு பாஜகவுடன் எப்பொழுதும் இருக்க மாட்டோம்.
மூச்சுக்கு முன்னூறு தடவை 'அம்மா அம்மா' என்று சொல்லிவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்துக் கொண்டு, 'தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்' என்று சொல்லும் அதிமுக போல நாங்கள் இருக்க மாட்டோம்" என்றார்.
திமுகவுக்கு வாக்களித்தால்...
தொடர்ந்து பேசிய அவர், "திமுக குடும்பம், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவிற்கு வாக்களித்தது போல்தான். வெளியில் அடித்துக்கொள்வது போலத் தெரியும். ஆனால் உள்ளுக்குள்... மக்களே ஜாக்கிரதையாக யோசியுங்கள்."
அதிமுக - பாஜக கூட்டணி விமர்சனம்
"இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது? நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்குத் தேவையான முழு நிதியைக் கொடுத்தார்களா? தமிழகத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டார்களா? அப்புறம் பிறகு ஏன் இந்தச் சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் எனக் கிண்டிக்கொள்ளட்டும், நமக்கு எதற்கு. அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்," என்று விமர்சித்தார்.
2026 போட்டி குறித்து...
"அதனால் தான் திரும்பவும் சொல்கிறேன், 2026-ல் இரண்டே பேருக்குத்தான் போட்டி. ஒன்று த.வெ.க., இன்னொன்று திமுக. ஒன்று மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாய் களத்தில் இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகம்; மற்றொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவிட்டு, கொள்ளையடித்து தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்த திமுக. இந்த இரண்டே இரண்டு பேருக்குத்தான் போட்டி," என்று விஜய் தெரிவித்தார்.