தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பேசினார். அங்கு அவருக்குத் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூரில் பிரசாரம் செய்த விஜய், ஆளும் திமுக அரசையும், உள்ளூர் அரசியல் புள்ளிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் அமைச்சரை விமர்சித்த விஜய்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், "கரூரில் ஒருவர் அமைச்சர் இல்லை என்றாலும் அவர் அமைச்சர் மாதிரி செயல்படுகிறார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள க்ளூ ஒன்று கொடுக்கலாமா?" என்று கேட்டவர், பின்னர், "பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று பாடல் பாடி மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த முன்னாள் அமைச்சர், திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ணும் பணத்தையெல்லாம் 24 மணி நேரமும் டெலிவர் செய்யும் ஏடிஎம் மிஷினாக இருக்கிறாராம். இது நான் சொல்லல, ஊருக்குள்ள பேசிக்கொள்கிறார்கள்" என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நிறைவேறாத வாக்குறுதிகள் மற்றும் மணல் கொள்ளை
விமான நிலையம்: "கரூர் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொன்னார்கள், இன்னும் செய்யவில்லை. விமான நிலையம் அமைந்தால் ஜவுளித் தொழிலுக்கு உதவியாக இருக்கும்."
மணல் கொள்ளை: "மணல் கொள்ளை தான் கரூரில் முக்கியப் பிரச்சினை. மணல் கொள்ளையர்களிடம் இருந்து கரூருக்கு விடுதலை வேண்டும்."
பஞ்சபட்டி ஏரி: "தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி கரூரில் இருக்கும் பஞ்சபட்டி ஏரி. அதன் பரப்பளவு 1000 ஏக்கருக்கு மேல். ஆனால், அதனைப் பல வருடங்களாகச் சீரமைக்காமல் வைத்துள்ளனர். தவெக ஆட்சி வரும்; அன்று பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும்."
அடுத்து ஆட்சி மாற்றம் உறுதி
இறுதியாகப் பேசிய அவர், "காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதத்தில் ஆட்சி மாறும். காட்சி மாறும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்," என்று தெரிவித்தார்.