பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் பெருவிழா மாநாட்டில் 14 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாடு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லாமல் நடைபெற்றதால் கவனம் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக இது போன்ற கட்சி நிகழ்வுகளில் அன்புமணி தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். இந்த மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்புதான், அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் அவரது தலைவர் பதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் மாநாட்டில் பேசிய ராமதாஸ், "கூட்டணிகுறித்து யார் சொல்வதையும் கேட்காதீர்கள், நான் சொல்வதுதான் நடக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்" என்று மூன்று முறை அழுத்தமாகத் தெரிவித்தார். இது, கட்சிக்குள் கூட்டணி முடிவுகள் எடுப்பது குறித்து நிலவும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
பாமக மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்
இடஒதுக்கீடு:வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு:தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டைச் சரியாக நிர்ணயிக்க, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
மதுவிலக்கு:பெண்களும் குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு:கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
பெண்களுக்கான பாதுகாப்பு:பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்குக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் கொடுமைகளைத் தடுக்க பெண் காவலர்களை நியமிக்க வேண்டும்.
நீட் தேர்வு:நீட் தேர்வின்போது மாணவிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் சோதனைகள் செய்வதை நிறுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பு:பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டம்:100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையையும் தினக்கூலியையும் அதிகரிக்க வேண்டும்.
உயர்கல்வி:மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
சுகாதாரம்:கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
விவசாயம்:காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்குக் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும்.
மீனவர் நலன்:பூம்புகார் மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பொருளாதாரம்:குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.