அரசியல்

ஆளுநர் நடத்தும் மாநாடு.. ஷாக் கொடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் புறக்கணித்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

ஆளுநர் நடத்தும் மாநாடு.. ஷாக் கொடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆளுநரின் செயல் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலும், முதல்முறையாக மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு காலக்கெடு விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோத உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததால் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறும் என்றும் பல்கலைக் கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புறக்கணிப்பு

இந்நிலையில், இன்று நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணித்தனர்.