தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் விழாவில், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் மேடையிலேயே நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் தொடர்ச்சியாக, ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகவும், மகாராஜனை கண்டித்தும் திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது, கட்சிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மோதலின் பின்னணி
தேனி மாவட்டம். ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு சென்ற தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், “புரோட்டாகால்படி தேனி மக்களவையின் உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் வைக்க வேண்டும். எதற்கு பேனரில் எனது புகைப்படம் இல்லை” என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது "எனது தொகுதியில் நான்தான் வழங்குவேன்” என நலத்திட்ட அட்டையை தங்க எம்பி தமிழ்செல்வனிடம் இருந்து மகாராஜன் எம்எல்ஏ பிடுங்கினார். இதனால் தங்க தமிழ்செல்வனுக்கும் மகாராஜனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
இந்த மேடை மோதலின் எதிரொலியாக, ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் என குறிப்பிடப்பட்டு பல்வேறு இடங்களில் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில், "25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், "கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவில் பரபரப்பு மற்றும் போலீஸ் விசாரணை
ஒரே கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் பொது மேடையில் மோதிக்கொண்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த போஸ்டர்களை ஒட்டியது யார், திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.