கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை எழுச்சியோடு நடைபெற்று வருவதாகவும், வரவிருக்கும் தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்டக் கழகங்களின் சார்பிலும் மிக எழுச்சியோடு பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் 3,017 வாக்குச்சாவடிகளிலும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு மிக எழுச்சியோடு தொடங்கியுள்ளது.
குறிப்பாக, ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்து வரும் துரோகங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகிறோம். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வழங்கிய பொற்கால ஆட்சித் திட்டங்களை துண்டுப் பிரசுரங்களாக மக்களுக்குக் கொடுத்து, வீடுதோறும் சென்று மக்களைச் சந்தித்து, சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறி வருகிறோம். 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் மக்களை இணைப்பதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். அதோடு, உறுப்பினர் சேர்க்கையும் மிக எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 30 விழுக்காட்டிற்கும் மேலானோரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். நிச்சயமாக இந்த முயற்சி வெற்றிப் பயணமாக அமையும்" என்று செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
கொங்கு மண்டல வெற்றி குறித்த கேள்வி:
’கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறினீர்கள், கொங்கு மண்டலத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?' என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளிக்கையில், "மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனச் சொல்லி இருக்கிறோம். அதேபோல, மண்டலத்தில் உள்ள தொகுதிகளின் வெற்றியையும் தேர்தல் முடிவுகள் வரும்போது பொறுத்திருந்து பாருங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதி (முதலமைச்சர்) வெற்றி பெறுவது உறுதி என்பதை வாக்காளர்கள் பெருமக்களும், மக்களும் உறுதி செய்வதில் எழுச்சியோடு இருக்கிறார்கள். 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பில் மக்கள் எவ்வளவு தன்னெழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். இதுதான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு நிலை. முதலமைச்சருக்குதான் முழு ஆதரவு" என்றார்.
கருத்துக் கணிப்புகள் குறித்த விமர்சனம்
பிரபல யூடியூப் கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகச் சொல்வது குறித்த கேள்விக்கு, "சாணக்யா யாருடைய சேனல்? அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? அதேபோல, நான் 2006-ம் ஆண்டில் இருந்து தேர்தலில் நிற்கிறேன். நான் ஜெயிப்பேன் என்று யாரும் ஒருமுறை கூடச் சொன்னதில்லை. கடைசியில் முடியாதபட்சத்திற்கு 'இழுபறி' என்று சொல்வார்கள். அது அவர்களின் மனநிலையைக் குறித்தது. எந்தக் கட்சியைச் சார்ந்து இருக்கிறார்களோ, அதற்கு ஆதரவாகத்தான் கருத்துக் கணிப்புகளைச் சொல்வார்கள்" என்றார்.
மேலும், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்னைக்குச் சென்றபோது, 'ரோடு ஷோ'வில் மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். ஒட்டுமொத்த ஆதரவையும் முதலமைச்சருக்கு மக்கள் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் வெற்றி பெறுவோம்" என்று செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் உறுதியாக கூறினார்.