அரசியல்

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு எந்த தொகுதி!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான அதிகாரப்பூர்வத் தொகுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு எந்த தொகுதி!
DMK Alliance
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான அதிகாரப்பூர்வத் தொகுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகக் களம் காணுகிறது. எஞ்சியுள்ள 70 தொகுதிகள் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட 13 கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இதில் பல சிறிய கட்சிகள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வத் தொகுதிகள் விவரம் வருமாறு:

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:

காங்கிரஸ் (28 தொகுதிகள்):

பொன்னேரி (தனி), 2. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 3. சோளிங்கர், 4. உதகமண்டலம், 5. ஈரோடு கிழக்கு, 6. அறந்தாங்கி, 7. கடலூர், 8. மயிலாடுதுறை, 9. காரைக்குடி, 10. சிவகாசி, 11. திருவாடானை, 12. ஸ்ரீவைகுண்டம், 13. நாங்குநேரி, 14. குளச்சல், 15. விளவங்கோடு, 16. கிள்ளியூர், 17. வேளச்சேரி, 18. ஊத்தங்கரை (தனி), 19. துறையூர் (தனி), 20. கவுண்டம்பாளையம், 21. ஆத்தூர் (தனி), 22. பென்னாகரம், 23. சிங்காநல்லூர், 24. அம்பாசமுத்திரம், 25. கிருஷ்ணகிரி, 26. உசிலம்பட்டி, 27. சங்கரன்கோவில், 28. மேலூர்.

தேமுதிக (10 தொகுதிகள்):

விருத்தாசலம், 2. விருதுநகர், 3. தருமபுரி, 4. குடியாத்தம் (தனி), 5. சேலம் மேற்கு, 6. போளூர், 7. பல்லாவரம், 8. திருத்தணி, 9. ஓமலூர், 10. மைலம்.

விடுதலை சிறுத்தைகள் (8 தொகுதிகள்):

காட்டுமன்னார்கோவில் (தனி), 2. செய்யூர் (தனி), 3. திருப்போரூர், 4. அரக்கோணம் (தனி), 5. திண்டிவனம் (தனி), 6. பெரியகுளம் (தனி), 7. கள்ளக்குறிச்சி (தனி), 8. பண்ருட்டி.

இந்திய கம்யூனிஸ்டு (5 தொகுதிகள்):

தளி, 2. திருத்துறைப்பூண்டி (தனி), 3. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 4. திருப்பூர் வடக்கு, 5. பவானிசாகர் (தனி).

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (5 தொகுதிகள்):

கீழ்வேளூர் (தனி), 2. கந்தர்வக்கோட்டை (தனி), 3. பத்மநாபபுரம், 4. பழனி, 5. திருவொற்றியூர்.

மதிமுக (4 தொகுதிகள்):

மொடக்குறிச்சி, 2. மதுரை தெற்கு, 3. கடையநல்லூர் (இவை உதயசூரியன் சின்னம்), 4. சீர்காழி (தனி - தனிச் சின்னம்).

இதர கூட்டணிக் கட்சிகள்:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: 1. பாபநாசம், 2. வாணியம்பாடி.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: 1. திருச்செங்கோடு, 2. பொள்ளாச்சி.

மனிதநேய மக்கள் கட்சி: 1. நாகப்பட்டினம், 2. மணப்பாறை.

முக்குலத்தோர் புலிப்படை: 1. சிவகங்கை.

மனிதநேய ஜனநாயக கட்சி: 1. சிதம்பரம்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி: 1. நன்னிலம்.

தமிழர் தேசம் கட்சி: 1. நத்தம்.

(குறிப்பு: மதிமுகவின் ஒரு தொகுதி தவிர மற்ற சிறிய கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன).