தமிழக அரசின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை செவன்டாலர்ஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், சபாநாயகர் எம். அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த விரிவாக்கத்தின் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் 210 பள்ளிகளைச் சேர்ந்த 13,115 மாணவர்கள் புதிதாகப் பயனடைவார்கள். ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் கீழ் 804 பள்ளிகளைச் சேர்ந்த 34,277 பேர் பயனடைந்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மத்திய அரசு மீது விமர்சனம்
“சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை மத்திய அரசு மறுத்துவிட்டது. தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் கோடியில் ரூ. 50,000 கோடியை கல்விக்காகச் செயல்படுத்தி வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விண்வெளியில் முதன்முதலில் கால் வைத்தது அனுமன் எனச் சொல்கிறார். மத்தியில் ஆளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்கள், பிற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட கருத்துக்களைத்தான் பரப்புவார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
“இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஒரு நக்சல் ஆதரவாளர் என அமித் ஷா கூறியதற்கு நீதி அரசர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சுதர்சன் ரெட்டி மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய ஒரு பொதுவான மனிதர். இதனை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுதர்சன் ரெட்டி குறித்துப் பேசியதை உள்துறை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும். சுதர்சன் ரெட்டி துப்பாக்கியைக் கீழே போட்டு சரணடையுங்கள் என்றுதான் கூறினார். சுதர்சன் ரெட்டி மீது விமர்சனம் வைக்கும் பிரதமரும் உள்துறை அமைச்சர்களும் அவர்களது பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் அவர்கள் யார் என்று தெரியும்.
பாஜக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர். அவரை நாங்கள் ஆதரிக்க முடியாது. நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் நடந்த குளறுபடியை விவாதிக்கக் கேட்டதற்கு கூட மத்திய அரசு மறுக்கிறது. சுதர்சன் ரெட்டி துணை குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றால் நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும்" என்று கூறினார்.
ஆளுநர் மீது குற்றச்சாட்டு
“முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது போன்று பல மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி பெற்று, மூன்று சதவீதம் அதிகமாகக் கடன் வாங்க அனுமதி கோரிய நிதி மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் நிலுவையில்தான் உள்ளது. தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.