பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த தகவல் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், அண்ணாமலையே நான் தலைவர் பதவிக்கான பரிசீலனை பட்டியலில் இல்லை என்று கூறிவிட்டார். அதனால் புதிய பாஜக தலைவராக பாஜக மேலிடம் யாரை நியமனம் செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு பாஜக தொண்டர்களியே நிலவி வருகிறது.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவருக்கான போட்டியில் அவர் முன்னணியில் உள்ள நிலையில், அமித்ஷா அழைப்பின் பெயரில் டெல்லிக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இன்று (மார்ச் -8) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி கடந்த 5-ஆம் தேதி தமிழகம் வந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பா.ஜ.க. புதிய தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து, அடுத்த வாரம் பா.ஜ.க. மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ளநிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்
பாஜக சட்டமன்றக்குழு தலைவர் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!
தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.