இந்து முன்னணி சார்பில் வருகிற ஜூன் 22 ஆம் தேதி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள அம்மா திடலில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் இராம.ஶ்ரீனிவாசன்,மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்வினைத் தொடர்ந்து காடேஷ்வர சுப்ரமணியன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பிரச்சனை வரும்போது ஒரு மிகப்பெரிய எழுச்சி உண்டானது.
அதன் வெளிப்பாடாக தான் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த முருகன் பக்தர்கள் மாநாடு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்துக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க நடைபெறும் பக்தி சார்ந்து நடைப்பெறும் மாநாடு என்றனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ”எங்களுடைய கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை தான். கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ED ரெய்டு எங்கே நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மேலே ED ரெய்டு நடக்கும் போது கீழே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உதயநிதி சிறுவயதில் இருந்திருப்பார் என நினைக்கிறேன். அதனால் அவருக்கு ED மீது பயம் இருக்கிறது.ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசுகையில், “ஜூன் 22 ஆம் தேதி நாங்கள் திட்டமிட்டிருப்பது முழுக்க முழுக்க பக்தி மாநாடு. பழனியில் நடைபெற்ற மாநாட்டை விட சிறந்த மக்களுக்கு பயனுள்ள மாநாடாக அமையும். எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தினார், அண்ணாமலை என் மண்-என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். நான் அனைவரையும் சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்வதே என் யாத்திரை” என்றார். ”தேர்தல்களில் இதற்கு முன்னால் 2 வது இடத்தை பிடித்திருந்தோம்.இனி முதல் இடத்தை பிடித்து சட்டமன்றத்திற்கு செல்வோம். ED ரெய்டுகாக தான் முதலமைச்சர் பிரதமரை சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.
முன்னதாக, திமுக ஆட்சியை வீழ்த்த தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே அணியில் இணைய வேண்டும் என்றார் நயினார் நாகேந்திரன். மேலும், NDA கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்துதான் எனது கருத்தும் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.