பாமகவில் மோதல் போக்கு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. இதில் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன் தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்தார். இதைக் கேட்டதும், மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரணித் தலைவர் நியமனத்திற்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி மைக்கை எடுத்தார்.
பாமகவில் ஜனநாயகம்
அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி, தொண்டர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வந்து என்னை பார்க்கலாம் என தெரிவித்தார். மேலும் தனது அலுவலக மொபைல் எண்ணையும் அறிவித்தார். இதனால் பாமக கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய ராமதாஸ், மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கியதுதான் வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான் எடுப்பது தான் முடிவு. நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையிலையே அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.
இதைத்தொடர்ந்து பேசிய ராமதாஸ், முகுந்தன் தான் இளைஞரணித் தலைவர் என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சமரசம் பேச்சுவார்த்தையில் பாமக மூத்த தலைவர்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பொதுக்குழு மேடையில் எழுந்த வாக்குவாதம் குறித்து அன்புமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அன்புமணி, பாமகவில் ஜனநாயகம் உள்ளது என்றார்.
ராமதாஸின் முடிவு தவறு
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன். பாமக தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமிக்கிறேன். அன்புமணி இன்று முதல் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார்.
மே 11ம் தேதி வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இப்போது தான் தலைவராகி இருக்கிறேன் என ராமதாஸ் பதில் அளித்தார். மேலும், கூட்டணி உள்ளிட்ட விசயங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்துப்பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், புதிய அறிவிப்புக்கு பல காரணங்கள் உண்டு, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது என ராமதாஸ் தெரிவித்தார். ஏற்கனவே மேடையிலேயே தந்தையும், மகனும் வார்த்தை போரில் ஈடுபட்ட நிலையில், அன்புமணியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் பாமகவில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக பொருளாளர் திலகபாமா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு….”என பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், ”அன்புதானே எல்லாம்” என தெரிவித்துள்ளார். அன்புமணியின் நீக்கத்திற்கு பாமகவின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.