தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.
நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று காலை கூடியது. அப்போது, நாமக்கல் சிறுநீரகத் திருட்டு மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் ஆகிய இரண்டு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தனர்.
அமைச்சர் மற்றும் சபாநாயகர் விமர்சனம்
அப்போது அவையில் பேசிய அமைச்சர் ரகுபதி, பேசுகையில், "சிறைகளில் சிறைவாசிகளுக்கு ஒரு அடையாளம் கொடுப்பார்கள். சிறைவாசிகளைப் போல் சில எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து வந்துள்ளனர்" என்று அ.தி.மு.க.வினரை கடுமையாக விமர்சித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் மு. அப்பாவு, "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஒன்றாக பி.பி. (இரத்த அழுத்தம்) அதிகமாகிவிட்டதோ என்று நினைத்தேன்" என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார்.
அமைச்சர் மற்றும் சபாநாயகரின் இந்த விமர்சனங்களும் கிண்டல்களும் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.