சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூரில் தனியார் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை துவங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் சிவசங்கர், தாமோ. அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், "தீவிரவாத தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது. மனித நேயத்தின் உச்சக்கட்டமாக காஷ்மீரில் இருந்த இஸ்லாமியர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்துள்ளார். அதை தான் நாம் பெரிதாக பேச வேண்டுமே தவிர எல்லாவற்றையும் ஒரு மதத்தின் பெயரால் சொல்வது சரியானது அல்ல.
உயிரிழந்தவர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள்” என்று விமர்சித்தார்.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.