அரசியல்

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?
ஆதவ் அர்ஜுனா-விஜய்

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சி மூலம் புதிதாக களமிறங்கி இருக்கிறார் விஜய். இவரின் கட்சி மற்ற கட்சிகளை பாதிக்குமா அல்லது பலப்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதையடுத்து, புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் யாருடன் கூட்டணி அமைப்பார்? சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வார்? என்று அரசியல் கட்சிகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 

மேலும் படிக்க: 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?

அதாவது, சமீபத்தில்  பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. இதில்,  கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில், விஜய் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று மாலை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து  தவெக-வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.