பிரதமர் மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வாழ்த்துச் செய்தி
இது குறித்து அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எனது பிறந்தநாளில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி. உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா-அமெரிக்கா இடையே எதிர்மறையான கருத்துகள் எழுந்த நிலையில், டிரம்ப், "நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.