குஜராத்தின் வதோதராவில், பகல் நேரத்தில் பலூன் விற்பனையாளர்கள் போலச் சுற்றித் திரிந்து, இரவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, 'வவ்வால் கும்பல்' (BAT GANG) எனப்படும் திருட்டு கும்பலைச் சேர்ந்த சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருட்டில் ஈடுபட மூன்று குழுக்கள்
இந்தக் கும்பல், பகல் நேரத்தில் பலூன்கள் விற்கும் சாக்கில் வீடுகளை நோட்டமிட்டு, பூட்டப்பட்ட வீடுகளைக் கண்டறிந்துள்ளது. இரவு நேரத்தில், மற்றொரு குழுவினர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருட்டுப் பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல மூன்றாவது குழு ஒன்று இருந்துள்ளது. இந்த முறையில், ஒரே நேரத்தில் முழு கும்பலும் பிடிபடாமல் தப்பிவிட முடியும் என அவர்கள் நம்பியுள்ளனர்.
மேலும், இவர்கள் உள்ளாடைகள் மற்றும் பனியன் மட்டுமே அணிந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கண்காணிப்புக் கேமராக்களில் அவர்கள் அடையாளம் தெரியாதபடி தப்பிவிடுவார்கள் என நினைத்துள்ளனர். திருட்டுக்கான ஆயுதங்களை, பள்ளி பைகளில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
வதோதராவின் மஞ்ஜல்பூர் மற்றும் மகர்புரா பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்த திருட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள், பள்ளிப் பையுடன் நிற்பதைக் கண்டனர். அந்த பையைச் சோதனை செய்தபோது, இரும்பு கம்பிகளை வெட்டுதல், பூட்டுகளை உடைத்தல், திருகுகளைத் திறப்பதற்கான கருவிகள் மற்றும் கவனைக் கற்கள் போன்றவை சிக்கின.
விசாரணையில், அவர்கள் தேவராஜ் சோலங்கி, கபீர் சோலங்கி மற்றும் ஒரு சிறுவன் எனத் தெரியவந்தது. வதோதராவில் நான்கு இடங்களில் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது, மூவரும் ஏழு நாட்கள் காவல்துறை காவலில் உள்ளனர்.
குற்றப்பின்னணி மற்றும் தேடுதல் வேட்டை
கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். இக்கும்பல் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது என்றும், கொலை முயற்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியது உட்பட பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், தங்களை அடையாளம் காட்டுவதற்காக தங்கள் மார்பில் வவ்வால் உருவத்தைப் பச்சை குத்தி வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற உறுப்பினர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.