தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான சிந்து நநிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
இசை நிகழ்ச்சி ரத்து
மேலும் அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினருடன், இந்திய ராணுவ வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வு இனி நடைபெற எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பிரபல பாடகி ஸ்ரேயால் தனது சூரத் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இது குறித்து பாடகி ஸ்ரேயா கோஷலும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரேயா கோஷலின் ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூரத் இசை நிகழ்ச்சி ஏப்.26( இன்று) பண்டிட் தீனதயாள் உபாத்யாய் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இது குறித்து அந்த அறிக்கையில், சமீபத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்து இன்று சூரத்தில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழு பணமும் திரும்ப வழங்கப்படும். பணம் செலுத்திய அதே முறையிலேயே தானாகவே திருப்பி செலுத்தப்படும். தங்களின் புரிதலுக்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.
உங்களுடன் நாங்களும் துக்கப்படுகிறோம்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “ என்னால் பஹல்காம் தாக்குதலை பற்றி நினைக்காமல் இருக்க முடியவிலை. அந்த குழப்பத்திற்கு பின் நிலவிய அமைதியைப் பற்றி, தங்கள் உலகம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை என்ற மனநிலையில் இருக்கும் குடும்பங்களை பற்றி.அழகான அமைதியான இடத்தில் உயிர்கள் பறிபோனது என் மனதை உடைத்துள்ளது. வன்முறையுடன் எந்த தொடர்பும் இல்லாத உயிர்கள் பலியாகியுள்ளன.இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல். உங்களுடன் நாங்களும் துக்கப்படுகிறோம். நாங்கள் நினைவில் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த அரிஜித் சிங் தனது இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார். மேலும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திஏகு அரிஜித் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.