பஹல்காம் தாக்குதல்
ஜம்மு- காஷ்மீரின் பைசாரம் பள்ளத்தாக்கில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நட்த்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளன. அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியில் ஆய்வு செய்தார்.
இதனிடையே சவூதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்.பின்னர் அவசரமாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நினைத்துப் பார்க்க முடியாத தண்டனை
இதைத்தொடர்ந்து விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்ட்து. மேலும் பாகிஸ்தான் உடனான வாகா எல்லை மூடப்படும் எனவும், சிந்து நதி நீர் பங்கீடு உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்த்து. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்திய ராணுவத்தினர் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நட்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் முழு நாடும் வேதனையில் உள்ளது. தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத தண்டனை கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.
அனைத்து கட்சிக் கூட்டம்
முன்னதாக சிந்துநதி ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு டெல்லியில் அனைத்து நாடுகளின் தூதர அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மேலும் பஞ்சாப் அருகே எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த தாக இந்திய ஜவான் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெறும் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தலைவர்கள் பேசுவதற்கு முன்னதாக பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்ட த்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்தும், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.