திருப்பதி விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி விமான நிலையத்திலிருந்து நேற்று (ஜூலை 20) இரவு 7:55 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ 6E 6591 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் சுமார் 40 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகு, திருப்பதி விமான நிலையத்திலேயே பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதேபோல, நேற்று காலை 6:19 மணிக்கு திருப்பதியிலிருந்து ஐதராபாத் புறப்பட்ட மற்றொரு இண்டிகோ 6E 2696 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டபடி, மீண்டும் பத்திரமாகத் திருப்பதி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
அடுத்தடுத்து விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து இண்டிகோ நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கிடையில் விமானங்களில் அடுத்தடுத்து கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் பயணங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்படுவது கவலை அளிப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.