தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 2024-25 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) 8.25% வட்டி விகிதத்தை வழங்க நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அவர்களின் பிஎஃப் கணக்குகளில் வட்டித் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் 237-வது கூட்டத்தில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், 2024-25 நிதியாண்டிற்கான பி.எப் கணக்குகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது. இது முந்தைய நிதியாண்டில் வழங்கப்பட்ட அதே வட்டி விகிதம் ஆகும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 2024-25 நிதியாண்டிற்கான EPF-க்கு 8.25 சதவீத வட்டி விகிதத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தொழிலாளர் அமைச்சகம் வியாழக்கிழமையன்று EPFO-க்கு இது தொடர்பான தகவலை அனுப்பியுள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரி ஒருவர் PTI-யிடம் தெரிவித்துள்ளார்.
மற்ற வைப்பு நிதி போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், பி.எப் நிலையான பலன்களை வழங்குகிறது. 2023-24 நிதியாண்டில் EPF வட்டி விகிதம் 8.15% இல் இருந்து 8.25% ஆக சற்றே அதிகரிக்கப்பட்டது. 2021-22 நிதியாண்டில், EPF வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது. இது கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். 2020-21 நிதியாண்டில் EPF வட்டிவிகிதம் 8.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.