இந்தியா

சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
பிரபல கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு, சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை enforcement directorate ( ED ) அதிரடி சம்மன் அனுப்பியுள்ளது இந்த நடவடிக்கை, இந்திய விளையாட்டு மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபகாலமாக, ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் அவற்றின் விளம்பரங்களில் பிரபலங்கள் ஈடுபடுவது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தச் செயலிகள் மூலம் பெருமளவில் பண மோசடி நடப்பதாகக் கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறை இது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தச் செயலிகளின் விளம்பரங்களில் தோன்றிய கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வீரர்கள். அதேபோல், நடிகர் சோனு சூட் தனது சமூக சேவைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர்களை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்திருப்பது, இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையைக் காட்டுவதாக அரசியல் மற்றும் சமூக நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தச் செயலிகள் தொடர்பாக மேலும் பல முக்கியப் பிரமுகர்கள் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.