அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாளுவதில் பெரும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு தவறுதலாக வேறொருவரின் உடல் அனுப்பப்பட்டதால், இறுதிச் சடங்குகள் நிறுத்தப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்கள் மாறிய அவலம்
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 52 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் அவரது குடும்பத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மனமுடைந்த உறவினர்கள்
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹீலி-பிராட் கூறுகையில், "இறந்தவர்களின் உடல்கள் தவறாகக் கையாளப்பட்டதால் உறவினர்கள் மனமுடைந்துள்ளனர். தவறான உடலைப் பெற்ற குடும்பத்தினருக்கு தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.
இந்தியா விளக்கம்
உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்தது. எனினும், தவறு நடந்திருக்குமானால், எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
"இறந்தவர்களின் கண்ணியத்திற்கு உரிய மரியாதையுடன் உடல்கள் கையாளப்பட்டன. உடல் மாற்றி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.