”Chewing Gumஅ உண்மையா எதுல செய்யுறாங்க தெரியுமா? பன்றிக் கொழுப்புல தான் செய்யுறாங்க” என்று சிறு வயதில் ஏதோ ஒரு நண்பன் கூறியதை கேட்டு அதை நாம் நம்பியிருப்போம்.. அனால் உண்மையில் chewing gum-ல் இருப்பது பன்றிக் கொழுப்பு அல்லது, அது முழுக்க முழுக்க மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் நிறைந்த ஒரு பொருள் தான் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஒரு மனிதன் சும்மா இருக்கும்போதோ, போர் அடிக்கும் போதோ, வாய் துர்நாற்றத்தை போக்கவோ Chewing Gum-ஐ பயன்படுத்துகின்றனர். இதில் இன்னும் சிலரோ, கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக chewing gum-ஐ பயன்படுத்துகின்றனர். ஆனால் அப்படி பயன்படுத்தும் chewing gum-னாலேயே பல வகையான கேன்சர் ஏற்படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இவ்வுலகில் மனிதர்களின் எண்ணிக்கையை விட மைக்ரோ பிளாஸ்டிக் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது நாம் உட்கொள்ளும் உணவு, குடிநீர், காற்று, இவ்வளவு ஏன் தாய்ப்பால், மனித மூளை மற்றும் ரத்தத்தில் கூட கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 39,000தில் இருந்து 52,000 மைக்ரோ பிளாஸ்டிக் வரை ஒரு மனிதனின் உடலுக்குள் செல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால் ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 90,000 மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்கிறது என அமெரிக்கவின் கெமிகல் சொசைட்டி தெரிவிக்கிறது.
இந்நிலையில், Journal of national medicine சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், ஒரு கிராம் chewing gumல் சுமார் 100 முதல் 600 மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Natural Chewing Gum, Synthetic Chewing Gum என இரண்டு வகையான Chewing Gum உலகளவில் கிடைக்கிறது. இதில் Natural Chewing Gum செடி அல்லது மரச் சாறு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. Synthetic Chewing Gumகள் ரப்பர் மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் Synthetic Chewing Gumல் அதிகபடியான மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இவ்வுலகில் Synthetic Chewing Gum பயன்பாடு தான் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி உயிர்கொல்லியான பிளாஸ்டிக் நமது உடலில் கலப்பதால், கல்லீரல், சிறுநீரகம், இனப்பெருக்கம், நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறது. அதுமட்டுமல்லாது, இப்படி நமது உடலில் சேரும் இந்த பிளாஸ்டிக்கால், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்திவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உடலுக்கு இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் விலை மலிவான, மிகவும் எளிதாக கிடைக்கும் இந்த chewing gum உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என ஆர்வலர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.