பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா, பனீர் ப்ரை.. அடடே என்னா டேஸ்டு, என்னா டேஸ்டு என Veg மற்றும் Non Veg பிரியர்கள் விரும்பி விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருள் என்றால் அது பனீர் தான். இப்படி அனைவருக்கும் டாப் favoriteஆக இருந்து வரும் பனீர், டேஸ்டில் மட்டுமல்ல, புரத சத்து மிகுதியாக உள்ள ஒரு உணவு பொருளாகும்.
இப்படியான ஒரு உணவை தான், தற்போது மிகவும் கலப்படம் செய்யப்பட்ட பொருள் என உணவு பாதுகாப்பு ஏஜென்சிகளால் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதாவது நொய்டாவில் விற்பனையாகும் வெவ்வேறு விதமான 702 உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு, நடத்தப்பட்ட ஆய்வில், பனீர் தான் மிகவும் கலப்படம் செய்யப்பட்ட பொருள் என தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பனீரில் 83 சதவீதம் பனீர் தரமானதாக இல்லை எனவும், அதை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பனீர்களில் பல மோசமான கெமிகல்கள் கலக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது, அதிக அளவில் பனீர் இருப்பது போல காட்ட அரோரூட், மைதா போன்ற மாவுகள் கலக்கப்படுவதாகவும், இதனால் அஜீரனக் கோளாறுகள் ஏற்படும் எனவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, சில விலை மலிவான பனீரில் டிடர்ஜண்ட், சின்தடிக் பால் பயன்படுத்துவதாகவும் இதனால் வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சேர்க்கப்படும் யூரியா போன்ற சோடாக்களால் சிறுநீகமும், கல்லீரலும் பாதிக்கப்படும் எனவும், பனீர் வெகு நாட்களாக கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக Formalin போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், கான்சர் கூட ஏற்படலாம் எனவும் பகீர் கிளப்பியுள்ளது அந்த ரிப்போர்ட்.
இதனால் கடைகளில் பனீர் வாங்கி சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளில் கிடைக்கும் பனீரை வாங்கியோ அல்லது வீட்டிலேயே பனீரை தயாரித்து அதை சமைத்து சாப்பிடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனீரில் நிறைய கலப்படம் நடப்பதாக கூறப்படும் இந்த ரிப்போர்ட் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் கலப்படமான பொருட்கள் மக்களின் தட்டுகளுக்கு செல்லாமல் இருக்க உணவு பாதுகாப்பு துறை சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.