சினிமா

கதறி அழுத விஷால் பட நடிகை...சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக வீடியோ வெளியீடு

நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை

 கதறி அழுத விஷால் பட நடிகை...சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக வீடியோ வெளியீடு
நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீருடன் வீடியோ வெளியீடு
தமிழில் 2010ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகிகளுள் ஒருவராக தனுஸ்ரீ தத்தா நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தன்னை சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

கண்ணீருடன் நடிகை வீடியோ

நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தனது குடும்பத்தினரால் தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக நான் காவல்துறையினரை அழைத்தேன். அவர்கள் வந்து முறையான புகாரை அளிக்க காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். நான் நாளை அல்லது அதற்குப் பிறகு செல்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலையும் கணிசமாக மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார், மேலும், என் வீட்டில் வேலைக்கு ஆட்களை அமர்த்த முடியவில்லை. மேலும் பணிப்பெண்களுடன் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் வந்து என் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடுகிறார்கள். இதனால் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். என் சொந்த வீட்டில் நான் சிரமப்படுகிறேன். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் புகார்

2008 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியபோது, 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் #MeToo இயக்கத்தைத் தொடங்கினார். ஒரு பாடல் காட்சியின்போது படேகர் தேவையற்ற அட்டூழியங்களைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இது மட்டுமல்லாமல், சாக்லேட் படத்தில் "துணிகளைக் கழற்றி நடனமாட" இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை வற்புறுத்தியதாகவும் நடிகை தனுஸ்ரீ குற்றம் சாட்டினார். இருப்பினும், படேகர் மற்றும் அக்னிஹோத்ரி இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.