சினிமா

Gangers movie X review: வடிவேலு காமெடிக்கு சிரிப்பு வருதா? இல்லையா?

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடிவேலு-சுந்தர்.சி கூட்டணியில் வெளிவந்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? இல்லையா? என்பதை காண்போம்.

Gangers movie X review: வடிவேலு காமெடிக்கு சிரிப்பு வருதா? இல்லையா?
Vadivelu Gangers movie X review
வடிவேலு தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது முதல் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான வெற்றிப்படம் அமையவில்லை. அவரது காமெடியும் சிரிப்பை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வின்னர், லண்டன், கிரி, தலைநகரம், நகரம் படங்களுக்கு பிறகு சுந்தர்.சி-யுடன் கைக்கோர்த்துள்ளார் வடிவேலு.

இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் என வழக்கமான சுந்தர்.சி படத்தில் நடிகர் பட்டாளம் நிரம்பி வழிவது போல் கேங்கர்ஸ் திரைப்படத்திலும் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வரை இப்படத்திற்கு நல்ல பாஸிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் காமெடி க்ளிக் ஆகியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். X வலைத்தளத்தில் படம் பார்த்த சிலரது விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு..




படத்தின் கடைசி 30 நிமிடத்தில் வடிவேல் சிறப்புத் தோற்றத்தில் வரும் காட்சிகள் நல்ல வொர்க் அவுட் ஆகியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.



காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்தையும் உள்ளடக்கி நல்ல கமர்ஷியல் சினிமாவாக கேங்கர்ஸ் வந்துள்ளதாக ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.