பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு விமர்சன ரீதியாகப் வரவேற்பைப் பெற்ற ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் அதியன் ஆதிரை மீண்டும் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் உடன் இணைந்துள்ளார். ‘தண்டகாரண்யம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் தினேஷுடன் இணைந்து நடிகர் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், உமாதேவி, அறிவு, தனிகொடி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரின் தற்போது வெளியாகியுள்ளது. படம் முழுக்க ஒரு காட்டுக்குள் நடப்பதாகத் தெரிகிறது. அங்கு நடக்கும் சண்டைகள், கடுமையான அதிகார மோதல்கள், பழங்குடியின மக்களின் வாழ்வியல் எனப் பல ஆழமான விஷயங்களை இப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, “காடுங்குறது வெறும் மரம், செடி, கொடி மட்டுமல்ல.. எங்கள் காதலும் தான்” போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் மற்றும் ‘அடியே அலங்காரி’ என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்திற்குத் தணிக்கைத் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிந்து, 'தண்டகாரண்யம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

A heart touched by love finds its truest self, even in the midst of chaos 🔥#Thandakaaranyam Teaser
— Neelam Productions (@officialneelam) August 25, 2025
▶️ https://t.co/HXXyn7090y
அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது…#ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம் @beemji @LearnNteachprod pic.twitter.com/LMu9EdooIn