இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 1) டெல்லியில் தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழில், கார் பார்க்கிங்கை மையமாகக் கொண்டு எதார்த்தமான குடும்ப திரைக்கதையுடன் உருவான 'பார்க்கிங்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை அள்ளிய வரலாற்று சாதனைப்புரிந்துள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
கார் பார்க்கிங் இடத்தைப் பிடிப்பதில் ஒரு இளைஞருக்கும் முதியவருக்கும் இடையே நிலவும் ஈகோ மோதலையும், அதன் உச்சக்கட்ட நிலையையும் பார்க்கிங் திரைப்படம் சுவாரசியமாக எடுத்துக்கூறியது எம்.எஸ் பாஸ்கர் தனது நடிப்பிற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
அதே நேரத்தில் இந்தப் படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த பார்க்கிங் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா, ராம ராஜேந்திரன் மற்றும் இளவரசு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை இயக்குநர் ராம்குமாரும், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கரும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதைச் சோல்டர்ஸ் பேக்டரி நிறுவன தயாரிப்பாளர் சினிஷும் வென்றுள்ள நிலையில் அவர்களுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2 முறை தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்த வாத்தி படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தில், காதலிக்க கைடு இல்ல சொல்லித்தர வா வாத்தி என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலாமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. தேசியவிருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் குமார், படக்குழுவினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.