சினிமா

Robo shankar:மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

இன்று மாலை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Robo shankar:மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி
பிரபல டிவி சேனலில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர் (46). தமிழில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர் மறைவு

இந்த நிலையில், நடிகர் ரோபா சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மருத்துவ சிகிச்சைகள் மூலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார். மேலும் போதைப்பொருளுக்கு எதிராக காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தான், படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று இரவு 09.05 மணி அளவில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவுக்கு கமல்ஹாசன், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் ரோபோ சங்கரின் உடல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.