சினிமா

மீண்டும் விரல் வித்தை காட்டும் STR... விண்டேஜ் லுக்கில் கொல மாஸ்!

தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பமான ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

மீண்டும் விரல் வித்தை காட்டும் STR... விண்டேஜ் லுக்கில் கொல மாஸ்!
மீண்டும் விரல் வித்தை காட்டும் STR... விண்டேஜ் லுக்கில் கொல மாஸ்!

கலக்குவேன்.. கலக்குவேன்.. கட்டம் கட்டி கலக்குவேன்.. என மீண்டும் தனது ஸ்டைலில் களமிறங்கியுள்ளார் எஸ்.டி.ஆர். AGS நிறுவனத்தின் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.        

கடந்த 2 நாட்களாகவே சிம்பு தனது புதிய படம் குறித்து பயங்கர பில்ட் அப் கொடுத்ததால் ரசிகர்கள் வெயிட்டிங்கிலேயே வெறியாகினர். எப்போடா அப்டேட் வரும் என்று ஆர்வமாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு விழுந்தது பாருங்க ஒரு இடி...... கழுத்துல டாட்டூ, கைகளில் அதே பழைய சங்கிலி, வயர் பிரேஸ்லெட், கலர் கலாரா மோதிரங்கள், ஸ்டார் படம் போட்ட கைக்குட்டை என தனது ஆரம்பக்கட்ட 90ஸ் பட பாணியில் விண்டேஜ் லுக்கில் காட்சியளிக்கிறார் சிம்பு. வல்லவன், மன்மதன், தம் என தனது படங்களின் ஐக்கானிக் லுக்குகளை ஒரு அரை அரைத்து ஒரே படத்தில் அத்தனை லுக்குகளையும் இறக்கியுள்ளார் சிம்பு. இதை நினைத்து சந்தோஷப்படுவதா? அல்லது துக்கப்படுவதா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். 

காரணம் என்னவென்றால், ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய கெட்டப்பில், வித்தியாசமான படங்கள், மாறுபட்ட சேலஞ்சிங்கான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்திருக்கிறார் சிம்பு. அப்படி இருக்கும் சூழலில் மீண்டும் 90ஸ் கால கட்டத்துக்கே சென்று, அதே பழைய கிரிஞ்ச் லவ்வர் பாயாக ஸ்கிரீனில் தோன்றிவிடுவாரோ என்ற பயம் ஒரு சில ரசிகர்களுக்கு இருப்பது தெரிகிறது. இன்னும் சிலர் படத்தின் போஸ்டருக்கு கீழ் “இவன் இன்னும் திருந்தல மாமா” என்ற கமெண்ட்டுகள் மற்றும் மீம்களை அள்ளி தெளித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ‘விண்டேஜ் சிம்பு இஸ் பேக்’ என மற்றொரு பாதி ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2020ம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின்  மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில், சிம்புவின் இப்புதிய படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. நிச்சயம் நம்மை ஏமாற்ற மாட்டார் என ரசிகர்களும் மனப்பூர்வமான நம்பிக்கை வைத்துள்ளனர். 

படங்கள் தோல்வி, காதல் தோல்வி, உடல் பருமன் என ஒரு Hard Phase-ல் தவித்து வந்த சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மாஸ் கம் பேக் கொடுத்து ரசிகர்களை பூஸ்ட் அப் செய்தார். வெந்து தணிந்தது காடு, மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர், தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலின் வளர்ப்பு மகனாக நடிக்கும் இவருடன் த்ரிஷா ஜோடி சேர்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என 3 வித்தியாசமான கெட்டப்புகளில் சிம்பு தோன்றவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.