சினிமா

Yesudas Return To India : 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் யேசுதாஸ்.. சென்னை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்!

Popular Playback Singer KJ Yesudas Return To India : கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் யேசுதாஸ் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக அவரது மகனும், பிரபல பின்னணி பாடகிருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

Yesudas Return To India : 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் யேசுதாஸ்.. சென்னை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்!
Popular Playback Singer KJ Yesudas Return To India

Popular Playback Singer KJ Yesudas Return To India : இந்திய திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களில் ஒருவர் கே.ஜே.யேசுதாஸ். தனது மாய குரலின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்.

சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 8 முறை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இது தவிர இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும் யேசுதாஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற யேசுதாஸ், பல ஆண்டுகளாக தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதுவும் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகள் இந்தியா வரவில்லை. கடந்த 2023ம் ஆண்டு யேசுதாசின் நெருங்கிய நண்பரான பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மரணம் அடைந்த நிலையில், யேசுதாஸ் அஞ்சலி செலுத்த இந்தியா வரவில்லை. 

இதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் யேசுதாஸ் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக அவரது மகனும், பிரபல பின்னணி பாடகிருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா வந்தவுடன் சென்னையில் மார்கழி இசை விழா உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள யேசுதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.