சினிமா

பிரபல மலையாள நடிகை கைது...சிறுமி அளித்த புகாரில் நடவடிக்கை

பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகை கைது...சிறுமி அளித்த புகாரில் நடவடிக்கை
சிறுமி அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகை மினு முனீர் கைது
பிரபல நடிகை மினு முனீரை என்பவரைத் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.


நடிகை மீது சிறுமி புகார்

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நடிகை மினு முனீர் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காகக் கேரளாவிலிருந்து சென்னை அழைத்து வந்துள்ளார்.அப்போது சென்னையில் தனியார் விடுதியில் அந்தச் சிறுமியைத் தங்க வைத்து அந்தச் சிறுமியிடம் நான்கு நபர்கள் தவறாக நடந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பித்து கேரளா சென்றுள்ளார்.

அந்தச் சிறுமி தற்பொழுது கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடிகை மினு முனீர் மீது புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை என்கிற காரணத்தினால் வழக்கைச் சென்னை திருமங்கலத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

மலையாள நடிகை கைது

இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளா சென்று நடிகை மினு முனீரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு உள்ளிட்டோர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக நடிகை மினு முனீர் குற்றம்சாட்டி இருந்தார். இது மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.