பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆந்திர சினிமாவின் மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார். ஆந்திர அரசியலில் அடியெடுத்து வைத்த பவன் கல்யாண், அந்நாட்டின் துணை முதல்வராகவும் உருவெடுத்தார். அவரது திரைப்படங்கள் ஆந்திர சினிமாவில் தொடர்ச்சியாக மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக உள்ள நிலையில், ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கோடை ஸ்பெஷலாக, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற பல்வேறு அவதாரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகிறது.
இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது.
மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.
தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா, ஒரு இயக்குநராக ஒவ்வொரு துறையையும் சீராக வழிநடத்தி, திரையில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இருக்குமாறு உறுதி செய்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை மொத்தமாக பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் வகையில் உருவாகியுள்ளது.
பாபி தியோல் முகலாய அரசராகவும், நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்திலும், சத்யராஜ் மற்றும் ஜிஷ்ணு செங்குப்தா போன்ற அனுபவ நட்சத்திரங்கள் கதைக்கு மெருகுத்தன்மையையும் , ஆழத்தையும் அளிக்கின்றனர்.
தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ள இந்தப் படம் ரசிகர்களின் மனங்களையும், பாக்ஸ் ஆஃபிஸையும் வெல்வதற்கான முழுத் தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார். ஜூன் 12 ஆம் தேதி ஒரு புராண வீரனின் காவியம் திரைக்கு வர இருப்பதால், அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.