சினிமா

ஓடிடியில் வெளியாகும் ‘மாரீசன்’.. எப்போ தெரியுமா?

‘மாரீசன்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் ‘மாரீசன்’.. எப்போ தெரியுமா?
‘Maareesan’ to be released on OTT
வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘மாரீசன்’ திரைப்படம், திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு, ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் தேதி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரையரங்கு வெளியீடும், விமர்சனங்களும்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ‘மாமன்னன்’ படத்தின் இந்த வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணியில் உருவான 'மாரீசன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கிய இந்தப் படம், கடந்த ஜூலை 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகளவில் ரூ.9 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

படத்தின் கதை மற்றும் படக்குழு விவரங்கள்

இந்தப் படத்தில், மறதி நோயுடைய வடிவேலுவை ஏமாற்றிப் பணம் பறிக்க முயலும் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரங்கள் இடையேயான பயணமே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா, கோவை சரளா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஓ.டி.டி. வெளியீடு

இந்த நிலையில், திரையரங்குகளில் படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதன்படி, ‘மாரீசன்’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படம் தமிழ் தவிர்த்து, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தப் படம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.