Devara Movie Trailer Released : ஆர்.ஆர் ஆர் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் தேவரா. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர், சையிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தேவரா படத்துக்கு ஜூனியர் என்டிஆர் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே தேவரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற தேவரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், அனிருத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய ஜூனியர் என்டிஆர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனத் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் ஜூனியர் என்டிஆர் – வெற்றிமாறன் கூட்டணி உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே தற்போது வெளியான தேவரா ட்ரைலர், ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கடற்கொள்ளையர்களை பின்னணியாக வைத்து ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது தேவரா. அதேபோல், இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளதும் தேவரா ட்ரைலரில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ட்ரைலரின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இன்னொரு பக்கம் ஜான்வி கபூரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
அதேநேரம் தேவரா ட்ரைலரில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகும் படங்களில் இது வழக்கமாகிவிட்டதாகவும், இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் தேவரா படம் ஆர்வம் காட்டுவது கஷ்டம் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், அனிருத்தின் பின்னணி இசை சூப்பர் என ஒரு தரப்பும், எதிர்பார்த்தளவுக்கு சிறப்பாக இல்லை என இன்னொரு தரப்பும் தெரிவித்துள்ளனர். படம் முழுக்க ஆக்ஷன் இருந்தாலும், அம்மா – மகன் சென்டிமென்ட் அதிகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தேவரா ட்ரைலரில் ஜூனியர் என்.டி.ஆர், கடலுக்கு அடியில் சுறாவுடன் சண்டை போடும் காட்சி இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
ஆனால், விஷுவலாக தேவரா ட்ரைலர் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. கிராபிக்ஸ், சினிமோட்டோகிராபி ஆகியவை தேவரா படத்துக்கு பிளஸ்ஸாக அமையும் என எதிர்பார்க்கலாம். வரும் 27ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை, தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக வெளியிடுகிறது படக்குழு. இதனால் தேவரா பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.