சினிமா

‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா?
First day collection details of the film Shakthi Thirumagan
நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘சக்தித் திருமகன்’ திரைப்படம்

இசையமைப்பாளராக இருந்து 'நான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் தமிழில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் 'சக்தித் திருமகன்' படம் நேற்று (செப்.19) திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்தில், த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்குத் தெலுங்கில் 'பத்ரகாளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், “இந்த படை போதுமா” என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல் நிலவரம்

இந்த நிலையில், ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.90 லட்சம் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வார விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.