சினிமா

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி

ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி
ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி
இயக்குநர், நடிகர் என்ற பன்முகத்தன்மை கொண்ட சுந்தர்.சி தற்போது எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் சந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் சண்முகம், அருண்குமார் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, “ரஜினி, கமல் இருவரும் சிறந்த நடிகர்கள். படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது.

எனது குருநாதர் இயக்குநர் மணிவண்ணனிடம் இருந்து தான் முடியாது என்று ஒன்றுமில்லை என்பதை கற்றுக் கொண்டேன். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து விதமான படங்களும் வர வேண்டும். நடிகர் சிம்பு ஒரு சகலகலா வல்லவன். அவர் விரைவில் வெளியே வரவேண்டும். நடிகர் வடிவேலு நடிப்பில் ஒரு லெஜண்ட்” என்று கூறினார்.

இதேபோல், நடிகர் வடிவேலு ’சிங்க் இந்த ரைன்’ என்ற பாடலுடன் ஆரம்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களின் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்த அவர் ’வின்னர்’ படம் போன்று ’கேங்கர்ஸ்’ படம் வெற்றிப்படமாக அமையும் என்றும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை படம் எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலரே அதில் சுந்தர் சி-யும் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டினார். சிவாஜி குறித்து மாணவர் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் தான் எனக்கு பிடிக்கும் என பதில் அளித்தார்.