சினிமா

AR Murugadoss : பாலிவுட்டில் ரீ-என்ட்ரி... AR முருகதாஸ் சம்பளம் இத்தனை கோடியா... Ok சொன்ன சல்மான்கான்

Director AR Murugandoss Salary For Sikandar Movie : சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இந்த இரண்டு படங்களுக்காகவும் ஏஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

AR Murugadoss : பாலிவுட்டில் ரீ-என்ட்ரி...  AR முருகதாஸ் சம்பளம் இத்தனை கோடியா... Ok சொன்ன சல்மான்கான்
AR முருகதாஸ் - சல்மான் கான்

Director AR Murugandoss Salary For Sikandar Movie : அஜித்தின் தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாஸ் காட்டினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அமீர்கான் என சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்துள்ள ஏஆர் முருகதாஸ், கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக நெல்சன் கமிட்டாக, பீஸ்ட் திரைப்படம் உருவானது.

தளபதி 65 வாய்ப்பு மிஸ்ஸானதால் ஏஆர் முருகதாஸுக்கு உடனடியாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. மீண்டும் பாலிவுட் செல்ல முயன்ற அவர், ஒருகட்டத்தில் அனிமேஷன் மூவி இயக்கவுள்ளதாக கூறினார். இறுதியில் அந்த முயற்சியும் தோல்வியில் முடிய, இப்போது வெறித்தனமாக கம்பேக் கொடுக்கவுள்ளார். அதன்படி ஒரேநேரத்தில் சிவகார்த்திகேயன், சல்மான் கான் ஆகியோரின் படங்களை இயக்கி வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23வது படத்தை இயக்கும் ஏஆர் முருகதாஸ், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தை இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் எஸ்கே 23 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், எஸ்கே 23 படத்துக்காக ஏஆர் முருகதாஸுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதைவிட சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்காக அதிக சம்பளம் வாங்கியுள்ளாராம் ஏஆர் முருகதாஸ். சல்மான்கானுடன் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கும் சிக்கந்தர் அடுத்தாண்டு ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது.

மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஹை ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவாகி வரும் சிக்கந்தர், பாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக ஏஆர் முருகதாஸ் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளாக பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் இருந்த ஏஆர் முருகதாஸுக்கு, இப்போது கோடிகளில் ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் உற்சாகமான அவர், அடுத்தடுத்து படங்கள் இயக்கவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான BMW X7 கார் வாங்கி கெத்து காட்டினார் ஏஆர் முருகதாஸ். இப்போது இரண்டு படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். சிக்கந்தர் படத்துக்காக ஏஆர் முருகதாஸுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க சல்மான் கானும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தான் ஹைலைட்டே.