ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் நேற்று, (ஆகஸ்ட் 14) அன்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், உபேந்திரா போன்ற பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ‘மோனிகா..’ என்ற சிறப்பு பாடலுக்கு நடமாடியுள்ளார்.
இந்த படம் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த படம் ரூ.1000 கோடி வசூலை கடக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் (ரூ.148 கோடி) சாதனையை ‘கூலி’ படம் முறியடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் உலகளவில் ரூ.151 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் ‘கூலி’ திரைப்படம் லியோ’வின் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் இந்த படம் வெளியான முதல் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து அசதியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வரும் வார இறுதிநாட்களில் பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.