பாக்யராஜ் இயக்கிய ’சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர், சாந்தினி தமிழரசன். அண்மையில் வெளியான 'சுழல் 2' சீரிஸ், ஃபயர், 'பெருசு ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் குமுதம் இதழுக்காக பிரத்யேக நேர்க்காணலில் நடிகை சாந்தினி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ஃபயர்' படத்துக்காக உங்களுக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு?
'ஃபயர்' படம் சென்சேஷனலை க்ரியேட் பண்ணும்னுதான் நினைச்சோம். ஆனா நல்ல வரவேற்பு பெற்றது. ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்கன்னு நிறைய பேர் பாராட்டினாங்க. அதில் மறக்க முடியாத பாராட்டுன்னா, வெங்கட் பிரபு சாருடையதுதான்."
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறீர்களே..?
"சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கணும்னு எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. அப்புறம்தான் ஒரு நடிகை என்றால் சோஷியல் மீடியாவுலயும் ஆக்டிவா இருக்கணும்னு தெரிஞ்சுது. முன்னெல்லாம் போட்டோ ஷூட் நடத்தினா, அதை பி.ஆர்.ஓ. மூலமாதான் ஷேர் பண்ணுவேன். ஆனா, இப்போ ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஃபோட்டோ ஷூட் நடத்தி, இன்ஸ்டாவுல ஷேர் பண்றேன்."
நடிப்புத் திறமையைத் தாண்டி, கவர்ச்சியை பார்த்துதான் வாய்ப்புகள் கிடைக்கிறதா?
"திறமை இல்லாத யாருக்கும் இங்கு வாய்ப்புக் கிடைக்காது; அப்படி கிடைச்சா, அது ரொம்ப நாள் நீடிக்காது . கவர்ச்சியைப் பார்த்து மட்டுமே வாய்ப்பு வரும்னா அதுக்கு எவ்ளோ பேர் இருக்காங்களே, அவங்க எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்குதா, என்ன?"
எந்த ஹீரோ உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
நான் ஏற்கெனவே இரண்டு படங்கள்ல அரவிந்த்சாமி சார்கூட நடிச்சிருக்கேன். அது இரண்டுமே ரிலீஸ் ஆகலை. நான் அஜித் சாரோட பயங்கர ஃபேன். எனக்கு அவர் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை.'
மூன்று மாதங்களுக்குள் நீங்கள் நடித்த ஐந்து படங்கள் ரிலீஸ். இன்னும் உங்கள் படங்கள் எத்தனை வரவுள்ளன?
'இன்னும் பத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. இந்த வருஷ ஆரம்பத்துலயே பேக் டு பேக் என் படங்கள் வெளியாகும்னு நான் எதிர்பார்க்கல. 'ஃபயர்' மாதிரியே 'சுழல் 2' வெப் சீரிஸுக்குமே எனக்கு நிறைய ரெஸ்பான்ஸ் வந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
(நேர்காணலின் முழுத்தொகுப்பினை தெரிந்துக் கொள்ள குமுதம் இதழை வாங்கி பயனடையவும்)