சினிமா

Bruce Willis: நடக்க பேச முடியாதா? பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஏற்பட்ட பிரச்னை

Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

Bruce Willis: நடக்க பேச முடியாதா? பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஏற்பட்ட பிரச்னை
Bruce Willis Reportedly Forgets Acting Career Amid Worsening Dementia
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஃப்ரோண்டோடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia) எனப்படும் ஒரு வகை மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, ப்ரூஸ் வில்லிஸ் தற்போது பேசுவதற்கும், நடப்பதற்கும் இயலாத நிலையில் உள்ளார் எனவும், தான் ஒரு நடிகர் என்பதே மறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ப்ரூஸ் வில்லிஸின் மகள் தல்லுலா, தனது தந்தை பலவீனமாக இருப்பது போன்ற புகைப்படங்களை சமீபத்தில் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான், அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவர காரணமாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டில், ப்ரூஸ் வில்லிஸ் முதலில் அஃபாசியா (Aphasia) எனப்படும் மொழி சார்ந்த குறைபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 40 ஆண்டுக்கால சினிமா வாழ்விலிருந்து முற்றிலும் விலகினார். அதன்பின்னர், ஃப்ரோண்டோடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia) எனப்படும் ஒரு வகை மறதி நோய் உறுதி செய்யப்பட்டது. இது ஒரு சிதைவுறும் மூளை நோயாகும். தற்போது ப்ரூஸ் வில்லிஸினால் நடக்க, பேச இயலாது என வெளிவந்துள்ள தகவல்களால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ப்ரூஸ் வில்லிஸின் திரைப்பயணம்:

ப்ரூஸ் வில்லிஸ் முதலில் தொலைக்காட்சி தொடரான "மூன்லைட்டிங்" (Moonlighting) மூலம் பரவலான கவனம் பெற்றார். ஆனால், அவருக்கு உண்மையான புகழின் வெளிச்சத்தை கொடுத்தது 1988 ஆம் ஆண்டு வெளியான "டை ஹார்ட்" (Die Hard) திரைப்படம் தான் என்றால் மிகையல்ல.

ஒருப்பக்கம் ஆக்‌ஷனில் புகுந்து விளையாடிய அதே காலக்கட்டத்தில், நடிப்புக்கு தீனிப்போடும் வகையிலும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். Quentin Tarantino இயக்கிய "பல்ப் ஃபிக்‌ஷன்" (Pulp Fiction - 1994) திரைப்படத்தில் அவர் நடித்த பாக்ஸ் கதாபாத்திரம் இன்றளவும் பலரின் பேவரைட்.

Terry Gilliam இயக்கிய "12 மங்கீஸ்" (12 Monkeys - 1995) இல் இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன.குறிப்பாக "12 மங்கீஸ்" திரைப்படத்திற்காக அவர் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். M.Night Shyamalan இயக்கிய திகில்-நாடகத் திரைப்படமான "தி சிக்ஸ்த் சென்ஸ்" (The Sixth Sense - 1999) ப்ரூஸ் வில்லிஸின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது எனலாம்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையில் வெளியான அசாசின் என்பது குறிப்பிடத்தக்கது.