சினிமா

AK64-ஐ இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?...மீண்டும் அஜித்துடன் கூட்டணி

குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 AK64-ஐ இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?...மீண்டும் அஜித்துடன் கூட்டணி
குட் பேட் அக்லி வசூல்

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரை நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படம் கடந்த ஏப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜித்குமாரின் முந்தைய திரைப்படமான விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு இல்லாததால் குட் பேட் அக்லி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக படம் வெளியான அன்று ரசிகர்கள் திரையங்களில் உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார். படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.30.9 கோடி வசூலித்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.குட் பேட் அக்லியில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும், சிம்ரன் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

ஏகே64-ஐ இயக்கும் ஆதிக்?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்திற்கு இசை மேலும் வலுசேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை (AK-64) ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.