சினிமா

'ப்ளீஸ்.. இப்படி செய்யாதீர்கள்...' நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள்

தயவுசெய்து சாலையில் மாடுகளை விடாதீர்கள்; நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம் என்று நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'ப்ளீஸ்.. இப்படி செய்யாதீர்கள்...' நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள்
தயவுசெய்து சாலையில் மாடுகளை விடாதீர்கள் - நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள்

சமூக சேவகி அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப் சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு காசோலையை உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவா விடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை நடிகை நிக்கி கல்ராணி மின்சார வாகனத்தில் சென்று பார்வையிட்டதோடு விலங்குகளின் பெயரைக் கூறி அழைத்து மகிழ்ந்தார் விலங்குகளை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி மற்றும் அப்சரா ரெட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டில் பராமரிப்பது போன்று காடுகள் மற்றும் இது போன்ற பூங்காக்களில் பராமரிக்கப்படும் உயிரினங்களையும் நாம் தத்தெடுத்து உணவளித்து பராமரிக்க வேண்டும்.

பொதுமக்கள் ஒரு விலங்கை தத்தெடுப்பதற்கு பணம் செலுத்தலாம் அது பூனையாக இருக்கலாம் அல்லது யானை ஆக கூட இருக்கலாம் இது போன்ற நிறைய விலங்குகளுக்கு உணவு மட்டுமின்றி மருத்துவ செலவும் தேவைப்படுகிறது. நாம் அதை தத்தெடுப்பதன் மூலம் அதற்கான முழுமையான மருத்துவ செலவு மற்றும் உணவு கிடைக்கும்.

எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் தாத்தா பாட்டி பேரன் என மூன்று நாய்கள் எங்கள் வீட்டில் உள்ளது. நமக்கு பிடித்த விலங்குகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம் நான் நாய்களை காசு கொடுத்து வாங்கவில்லை எனக்கு பரிசாக வந்ததை நான் வளர்த்து கொண்டிருக்கிறேன் அதன் வாரிசுகளாக எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது..

சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம்.. அதுவும் ஒரு உயிர்தான். சாலையில் மாடுகளை விடாதீர்கள்; நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். தயவுசெய்து, அது போல் சாலையில் விடாதீர்கள்” என வேண்டுகோள் விடுத்தனர்.