சினிமா

Vijay: விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்… அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா..? விலை மட்டும் இத்தனை கோடி!

கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு, புதிய லெக்ஸ்ஸ் கார் வாங்கியுள்ளார். இந்த காரில் இருக்கும் வசதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Vijay: விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்… அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா..? விலை மட்டும் இத்தனை கோடி!
விஜய்யின் புதிய lexus lm 350h கார்
சென்னை: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒருபக்கம் விஜய்யின் கோட் வைப் வெறித்தனம் காட்டுகிறது. இன்னொரு பக்கம் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ரெடியாகிவிட்டார் தளபதி விஜய். 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதால் அடுத்தடுத்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் விஜய் புதிய சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
கார் பிரியரான விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், BMW, ஆடி, ரேஞ்ச் ரோவர் பல சொகுசு கார்களை வாங்கியிருந்தார். இவைகளில் 8 கோடி ரூபாய்க்கு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை, சில வாரங்களுக்கு முன்னர் விற்றுவிட்டாராம். ஆனால் அதற்கு பதிலாக 3 கோடி ருபாய் மதிப்பிலான Lexus 350H ரக சொகுசு காரை தற்போது வாங்கியுள்ளார். மினி கேரவன் மாடலில் இருக்கும் இந்த Lexus 350H பெட்ரோல், மின்சாரம் என இரண்டிலும் இயங்கும் வசதி கொண்டது.

இதோடு இன்னும் பல வசதிகள் இந்த Lexus 350H காரில் உள்ளன. இதில் 7 சீட்டிங் வசதிகள் இருந்தாலும், விஜய் வாங்கியுள்ளது 4 சீட்டிங் வேரியண்ட். டிரைவரின் சீட்டில் இருந்து பார்த்தால் பின் சீட்டில் இருப்பவர்கள் யார், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியாதவாறு கண்ணாடியால் மறைக்கும் வசதி உள்ளது. அதேநேரம் டிரைவர் சீட்டில் இருந்தபடி கன்ட்ரோல் செய்யும் அனைத்து வசதிகளும், பின் சீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், பின் சீட்டில் இருப்பவர்கள் படம் பார்க்க வசதியாக 48 இன்ச் அளவில் பெரிய எல்ஈடி டீவி ஒன்றும், 23 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டமும் உள்ளன. இது கிட்டத்தட்ட மினி ஹோம் தியேட்டர் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், புத்தகங்கள் படிக்க வசதியாக ரீடிங் லைட்ஸ், தண்ணீர், கூல்டிரிங்ஸ் வைக்க மினி ஃபிரிட்ஜ் ஆகியவை உள்ளன. 

மேலும் ஆட்டோ கிளைமேட் அசஸ்ட்மெண்ட் வசதி இருப்பதால், மழை, குளிர் காலங்களில் அதுவாகவே வெதுவெதுப்பான வெதர் மோடுக்கு மாறிவிடும். அதேபோல் வெயில் காலங்களில் அதன் டெம்ப்ரேச்சருக்கு ஏற்றபடி கூலிங் ஆகிவிடும். முக்கியமாக சீட்டிங் தான் ரொம்பவே சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மசாஜ் வசதியுடன் உள்ள இந்த சீட்களை படுக்கையாகவும் மாற்றிக்கொள்ளலாம். 
அரசியலில் களமிறங்கவுள்ள விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். அதனால் தான் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.