நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’, ‘கண்ணாடி பூவே’ போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிலும், ‘கனிமா’ பாடலில் பூஜா ஹெக்டே போட்ட ஸ்டெப்புகளை இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்ததாக நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு|ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ள படக்குழு இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LIVE 24 X 7