சினிமா

Retro Trailer: அன்பு மவனே..டாடி கம்மிங்: எப்படியிருக்கிறது ரெட்ரோ டிரைலர்?

ரசிகர்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு அமைந்துள்ளதா நடிகர் சூர்யாவின் ரெட்ரோ டிரைலர்? எக்ஸ் வலைத்தளத்தில் பயனர்களின் கருத்து என்ன?

Retro Trailer: அன்பு மவனே..டாடி கம்மிங்: எப்படியிருக்கிறது ரெட்ரோ டிரைலர்?
Actor Suriya retro movie trailer frames
நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம்,கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’, ‘கண்ணாடி பூவே’, ’தி ஒன்’ என 3 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து இன்றையதினம், படத்தில் மேலும் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் மற்றும் ‘ரெட்ரோ’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பங்கேற்று படம் குறித்து சிறப்புரையாற்றினர்.

2 நிமிடம் 42 நொடி டிரைலர்:

சூர்யாவின் நடிப்பில் திரையில் வெளியாகிய சமீப கால படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளார் சூர்யா. அவரின் நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு டிரைலர் கலர் புல்லாக வந்துள்ளது. இதுவரை பார்க்காத லுக்கில் சூர்யாவின் கெட்-அப் கவர்கிறது. நடனம், காதல், ஆக்‌ஷன் என அனைத்தையும் உள்ளடக்கியதாக டிரைலர் அமைந்துள்ளது. ஜெயராம் கதாபாத்திரம் தனித்து தெரிகிறது. கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா கூட்டணியில் முதல் படம் என்பதால் டிரைலர் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் டிரைலர் அமைந்துள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றின் சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு..


‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு|ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கங்குவா திரைப்படத்தை விட 20 மடங்கு டிரைலர் சிறப்பாக உள்ளது என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.