பாகிஸ்தான் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நேற்று இரவு இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்திய ராணுவம் சாதுரியமாக கையாண்டு ஏவுகணை தாக்குதலை முறியடித்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பல்வேறு சேதங்களை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் முறியடிப்பு
இந்த நிலையில் இந்தியாவின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் ட்ரோனை நடுவானிலேயே இந்தியா வழி மறித்து தாக்கி அழித்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜம்மு, ராஜஸ்தான், குர்தாஸ்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது.
மேலும் ஜம்முவின் எல்லையோர பகுதிகளான ஆர்.எஸ்.புரா உள்பட 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏர் சைரன்கள் ஒலிக்கவிடப்ப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்திய ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதேபோல் ராஜஸ்தானின் ஜெய்சால்மரை குறி வைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம் அதிரடி காட்டியுள்ளது. பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து அசத்தி வருகிறது. இருப்பினும் எல்லையோர மாநிலங்களில் இந்திய ராணுவத்தினர் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.