மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருவெங்கட பெருமாள் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் சக்கரைசெட்டிப்பட்டியில் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் பங்கேற்புடன் கோலாலகலாம நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் மீனூர் மலையில் உள்ள சுயம்பு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புனித நீர், கோயில்ல் வளாகத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மூலவர் கோபுரம் பத்மாவதி தாயார் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பின்பு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் விளநகர் கிராமத்தில் அமைந்துள்ள தென்காஞ்சி என அழைக்கப்படும் பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பட்டாச்சாரியர்கள் புனித நீர் அடங்கி கடங்களை தலையில் சுமந்து மேள தாளம் வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பழனி கோவை சாலையில் உள்ள சின்ன கலைய முத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மங்கல இசை மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு ராமேஸ்வரம் சண்முக நதி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரங்கள் ஹோம திரவியங்கள் புஷ்பங்கள் உள்ளிட்ட பொருட்களால் யாகசாலை வளர்க்கப்பட்டு மூலஸ்தான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் பெத்தநாயக்கன்பட்டி கரடிக்கூட்டம் புஷ்பத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.