ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோயில்: சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயில்: சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!
தஞ்சை பெரிய கோயில்: சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18 நாட்களும் ஒவ்வொரு சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவர். வரும் 10-ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.