ஆன்மிகம்

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பொறுமைக்கும்- நிதானத்துக்கும் பரிசு காத்திருக்கு!

மிதுனம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பொறுமைக்கும்- நிதானத்துக்கும் பரிசு காத்திருக்கு!
mithuna rasi guru peyarchi palangal
நவகிரஹங்கள் ஒன்பதுமே குறிப்பிட்ட கால இடைவெளியில நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதே சமயம், குரு, ராகு-கேது, சனி கிரஹங்களின் நகர்வுகள் மட்டுமே அனைவராலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்றும், திருக்கணிதப்படி 14.05.2025 அன்றும் குருபெயர்ச்சி ஏற்பட உள்ளது. இதனடிப்படையில், மிதுனம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.. அதன் விவரம் பின்வருமாறு-

மிதுனம் :

உங்க ஜன்மராசியான மிதுனத்துக்கு ஏழாமிடத்துக்கும், பத்தாம் இடத்துக்கும் உரியவரான குரு பகவான், இதுவரை உங்கராசிக்குப் பன்னிரண்டாம் இடமான ரிஷபத்துல இருந்தார்ங்க. அவர் இப்போதைய பெயர்ச்சியில உங்க ஜன்ம ராசியான மிதுனத்துக்கு வந்திருக்கார்ங்க. இந்த சமயத்துல அவருடைய ஐந்து, ஏழு ஒன்பதாம் பார்வைகள் உங்க ராசிக்கு முறையே ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாமிடமன களத்திர ஸ்தானம், ஒன்பதாம் இடமான பித்ரு பாக்ய ஸ்தானம் ஆகிய இடங்கள்ல பதியுதுங்க.

இந்த சமயத்துல் திருக்கணிதப் படியான சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனிபகவான் உங்க ராசிக்குப் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்துல இருக்கறதையும், வரப்போற ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்க ராசிக்கு ஒன்பதாமிடத்துக்கு ராகு, மூன்றாம் இடத்துக்கு கேது வரக்கூடிய அமைப்பும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்குங்க. இந்த அமைப்பின்படி, உங்க பொறுமைக்கும் -நிதானத்துக்கும் பரிசாக பெருமைகள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்க.

Read more: மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பெண்களுக்கு யோகமான காலகட்டம் இனி ஆரம்பம்

அலுவலத்துல மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும்க. பலகாலக் கனவுகளாக இருந்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் ஒவ்வொன்றாக கைகூடிவரத் தொடங்கும்க. இந்த சமயத்துல, எல்லாம் தெரியும்கற எண்ணத்தையும் ஏனோதானோ செயலையும் தவிர்க்கணும்க. உங்கள் முயற்சியால் உருவாகக் கூடிய புதிய திட்டம் நிச்சயம் நல்லபலன் தருவதாக இருந்தாலும் அதை உரிய வகையில மேலிடத்திடம் சொல்லி தகுந்த அனுமதி வாங்கிட்டு செயல்படுத்தறதுதான் நல்லதுங்க மூன்றாம் நபர் விஷயத்துல நீங்க ஆலோசனை சொல்ல மூக்கை நுழைக்க வேண்டாம்க. உடனிருப்போர் தவறுகளை பூதக்கண்ணாடியால பார்க்கறதும் கூடாதுங்க. பணியிடத்தில் வீண் பகையை வளர்த்துக்கிட்டா, அது விபரீதத்தை உங்களுக்குதான் ஏற்படுத்தும், உணர்ந்து செயல்படறது உத்தமம்க.

மனம்விட்டு பேசினால் எல்லாம் மகிழ்ச்சி தான்:

குடும்பத்துல சுணக்கமும் பிணக்குமாக இருந்த நிலை மாறி, சுபிட்சங்கள் இடம்பிடிக்கும்க. உறவுகளிடையே இருந்த உரசல் நீங்கி, ஒற்றுமை உருவாகும்க. வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரிவு நிலை மாறும்க. அதேசமயம், மனம்விட்டுப் பேசினால்தான் மனையில மகிழ்ச்சி நிலைக்கும்க. இளம் வயதினருக்கு மனம்போல மாங்கல்ய பாக்யம் அமையும்க. ஆனா, அதுக்காக அவசரப்படுதல் கூடவே கூடாதுங்க. மழலைப்பேறுக்காக காத்திருந்தவங்க மனம் மகிழும் சூழல் உருவாகும்க. ஆடை, ஆபரணப் பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. விலை உயர்ந்த பொருட்களை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்துல வைக்கறது நல்லதுங்க. குடும்ப விஷயங்களை செல்போன்ல பேசும்போதும் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்க. எந்த சமயத்திலும் வறட்டு கௌரவமும், வீண் ரோஷமும் தவிர்த்தா இல்லம் வெல்லமாக இனிக்கும்க.

செய்யும் தொழில்ல தளர்ச்சி இல்லாத முயற்சிகள் இருந்தா, வளர்ச்சி நிச்சயம் ஏற்படும்க. கூட்டுத் தொழில்ல சந்தேகம் எட்டிப்பார்க்காம இருக்கறது அவசியம்க. தேவையில்லாத முதலீடுகளைச் செய்யாம இருந்தாலே சேமிப்பு நிலைக்கும்க. வங்கிக்கடன் நிலுவைகளை முறையாகச் செலுத்துங்க. அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரி போன்ற எதையும் அலட்சியம் இல்லாம உரிய முறையில செலுத்திடறது அவசியம்க. நிழல் காலம் வேலைக்கு கனவில் தலையாட்டினாலும் நிஜவாழ்க்கை இருட்டாகிடும் உணர்ந்து நடந்துக்குங்க. அயல்நாட்டு வர்த்தகத்துல தரக்கட்டுப்பாட்டுல நேரடி கவனம் செலுத்துங்க.

எச்சரிக்கையா இருப்பது நல்லது:

அரசு, அரசியல் சார்ந்தவங்க, வாக்கிலும் செயலிலும் எச்சரிக்கையாக இருக்கறது நல்லதுங்க. எதிரிகளோட பலம் அதிகரிக்கக் கூடிய காலகட்டம் என்பதால, நீங்க எப்போதோ செய்த தவறுகள் இப்போ பூதாகரமாக்கப் படலாம்க. உடனிருக்கும் யாரையும் உதாசீனம் செய்யாம இருக்கறது நல்லதுங்க. யாருக்கும் வாக்குறுதி தர்றதுக்கு முன்னால, அவசியமான்னு நல்லா யோசிக்கணும்க. புறம்பேசும், முகஸ்துதி பாடும் நட்புகளை உடனே உதறுங்க. எதிர்பாலரிடம் எச்சரிக்கையா இருங்க.

Read also: ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: வார்த்தையில் கவனம்..மற்றபடி முன்னேற்றம் தான்!

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வாசல்தேடி வரும்க. தலைகனம் தவிர்த்து தன்னம் பிக்கையோட செயல்பட்டா, வாய்ப்புகள் தொடர்ந்து வரத்தொடங்கும்க. கடந்தகால அனுபவங்களை பாடமாக வைச்சுகிட்டா, எதிர்காலம் ஏற்றமாக இருக்கும்க. மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்க. இரவு நேரக் கேளிக்கை நடக்கும் இடங்களுக்கு போகறது உங்க எதிர்காலத்தை இருட்டாக்கிடலாம், தவிருங்க. வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வரும்போது, பாஸ்போர்ட், கல்விக்கான அனுமதிக் கடிதங்களை பத்திரமா வைச்சுக்குங்க. செல்லும் நாட்டின் சட்டதிட்டங்களை முழுமையாக மதிச்சு நடங்க.

பணி சார்ந்த பயணங்கள் அதி கரிக்கும்க. வாகனத்தை நீங்க ஓட்டிச் செல்லும்போது நிதானத்தை இழக்கச் செய்யும் வஸ்துகளுக்கு இடம்தரவேண்டாம்க. மீறினா, உங்க குடும்பத்தினர் நிம்மதியை இழக்க நேரிடலாம்க. ரத்த அழுத்த மாற்றம், கழிவு உறுப்பு உபாதை, உணவுக்குழாய், மன் அழுத்தம் வரலாம்க. அறுபது வயதைக் கடந்தவங்க, ஒருமுறை முழு உடல்பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.

இந்த குருபெயர்ச்சி காலகட்டத்துல ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவில் சென்று சுவாமி அம்பாளை வணங்கிட்டு, முத்துக்குமார சுவாமியையும் ஆராதிச்சுட்டு வாங்க. எப்போதும் துர்க்கையை வணங்குங்க. வாழ்க்கை செழிக்கும்.